திங்கள், 7 செப்டம்பர், 2009

என்னைக் கவர்ந்த இஸ்லாம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குவைத் மண்டலம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்ச்சி 4-09-2009 வெள்ளிக்கிழமை பின்தாஸில் உள்ள இந்தியன் கம்யூனிட்டி ஹாலில் அஸர் தொழுகைக்கு பின் தொடங்கியது.

குவைத் மண்டல தாயிகளில் ஒருவரான முகம்மது கான் வரவேற்புரையாற்ற மண்டல தலைவர் ராஜா அகமது தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் தொடக்கமாக நாங்கள் எப்படி இஸ்லாத்தால் கவரப்பட்டோம்? என்பதை புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்கள் விளக்கினார்கள்.

முதலாவதாக சகோ.அமீர் அவர்கள் தான் இஸ்லாத்தில் வந்ததை உருக்கமாக விளக்கினார்.

அடுத்து கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்த சகோதரி ரஹீமா அவர்கள் நான் விவாதம் செய்து தான் இஸ்லாத்தை ஏற்றேன். என்னை இஸ்லாம் கவர்ந்த அளவிற்கு இஸ்லாமியர்கள் கவரவில்லை எனக் கூறியது அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை சிந்திக்க வைத்தது.

அடுத்து இஸ்லாத்தை தழுவிய சகோ அப்துஸ்ஸமத் அவர்கள் குவைத் நாட்டுக்காரர் பணம் தருகிறேன் என ஆசை காட்டிய போதெல்லாம் ஈர்க்கப்படாத இஸ்லாம் பீ.ஜே மொழிபெயர்த்த குர்ஆனை படித்த போது ஈர்த்தது என்றார்.

அடுத்து இஸ்லாத்தை தழுவிய சகோ முகம்மது யூசுப் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

இதனிடையே இந்நிகழச்சிக்கு உறுதுணையாக இருந்த மப்ரஅத்துத் தவாஸில் கைரிய்யாவின் நிறுவனர் அபுநயீஃப் அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

அடுத்ததாக இஸ்லாத்தை தழுவிய சகோ.சித்தீக் அவர்கள் நான் இஸ்லாத்தை தழுவுவதற்கு யார் காரணமாக இருந்தாலும் இஸ்லாம் இவ்வளவு அருமையான மார்க்கம் என்பதை டி.என்.டி.ஜே தலைமையில் நடைபெறும் மூன்று மாத வகுப்பில் சேர்ந்த பின்பு தான் அறிந்து கொண்டேன் என்று கூறியது உள்ளத்தை தொடும் விதமாக இருந்தது.

அடுத்ததாக இஸ்லாத்தை ஏற்ற சகோ. அப்துல்லாஹ் அவர்கள் தான் இஸ்லாத்தை ஏற்றதற்காக இவன் தீவிரவாதியாக மாற்றப்பட்டு விட்டதாக கூறினர்.அதனையெல்லாம் இஸ்லாம் ஏவவில்லை என்பதை எளிய முறையில் விளக்கினார்.

அடுத்து இஸ்லாத்தை தழுவிய சகோ.முகம்மது ஷரீஃப் அவர்கள் தன்னை பீ.ஜே அவர்களின் எளிமையான விளக்கம் என்னை மிகவும் கவர்ந்ததாக கூறினார்.

இந்நிகழ்ச்சி அனைத்தையும் மேலாண்மைக்குழு உறுப்பினர் பொறியாளர் சாகுல் அப்துல் ஹமீது அவர்கள் தொகுத்து வழங்கினார்.

இப்தாருக்குப்பின் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள மாநில பேச்சாளரும், மாநில தலைமை மேலாண்மைக்குழு உறுப்பினருமான சகோ. அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி நற்குணமும் நன்னடத்தையும் அழைப்புப் பணிக்கு அவசியம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

இறுதியாக குவைத் மண்டல தலைமை தாயி முஹிப்புல்லாஹ் உமரி நன்றியுரையாற்றி நிகழ்ச்சியை இனிதே நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் 50 பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இப்தார் உணவும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக