சனி, 29 ஆகஸ்ட், 2009

குவைத் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நபி வழி உம்ரா பயணம்!




குவைத் டிஎன்டிஜே சார்பாக ஆர்வமுள்ள பலர் 19-8-09 முதல் 29-8-09 நாள் வரை நபி வழி உம்ரா விற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு நபிவழியில் உம்ரா கிரியைகளை முடித்து விட்டு அனைவரையும் நபிவழியில் ஹஜ் கிரியைகளை நிறைவேற்றும் இடங்களான மினா, அரபா மைதானம், முஸ்தலிபா, ஷைத்தானுக்கு கல்லெறியும் இடம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கி எடுத்துரைக்கப்பட்டதோடு வரலாற்றுப் பின்னனியைக் கொண்ட ஸவ்ர் குகை, ஹிரா குகை அழைத்துச் செல்லப்பட்டது.இந்த உம்ரா பயணத்தின் மற்றொரு பிரிவாக நன்மையை நாடி மஸ்ஜிதுன்னபவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதோடு மதீனாவில் வரலாற்று பின்னனிகளைக் கொண்ட இடங்களான குபா பள்ளி, கிப்லத்தைன் பள்ளி, அகழ்போர், உஹதுப் போர், பத்ர் போர் ஆகியன நடந்த இடங்களுக்கும், மக்கா மதீனா ஆகிய இரு இடங்களில் உள்ள வரலாற்றுப் பின்னனி சிறப்புகளைப் பற்றி குவைத் மண்டல தலைமை தாயி முகிப்புல்லாஹ் உமரி அவர்களின் சொற்பொழிவுகளும் நடந்தது.

இப்பயணத்தில் குவைத், ஜித்தா, மக்கா, மதீனா ஆகிய மண்டலத்தின் நிர்வாகிகள் அனைவரும் சந்தித்து கலந்து பேசி அழைப்புப் பணி பற்றிய கருத்துப்பரிமாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

சுந்தர் ராஜ் என்ற சகோதரர் அமீர் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு அவர் பிறந்த போது இருந்த இஸ்லாமிய மார்கத்திற்கே வந்து சேர்ந்தார்.

இனி படைத்தவனை தவிர படைப்புகளை வணங்க மாட்டான் என் சகோதரன்.

21-08-2009 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் ஹதியா கிளையில் திருவாரூர் மாவட்டம் வடபாதி மங்களம் 51-மனக்கரையை சேர்ந்த சுந்தர் ராஜ் என்ற சகோதரர் அமீர் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டார் அல்லாஹு அக்பர்.

சகோதரர் அமீர் அவர்கள் தூய இஸ்லாத்தை ஏற்று மத்ஹபுகள் பக்கம் போய்விடாமலும் குர்ஆண் ஹதீஸ் அடிப்படையில் தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும் துஆ செய்வோம் இன்ஷா அல்லாஹ்.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

TNTJ நடத்திய தமிழக முதல்வர் வீடு முற்றுகை, ஸ்தம்பித்து போன சென்னை அண்ணா சாலை!


மழை வெள்ளத்தை மிஞ்சிய மக்கள் வெள்ளம்

S.P பட்டினப் பள்ளியை மீட்க நடந்த முதல்வர் வீட்டு முற்றுகை அதிகாரிகளையும் பொது மக்களையும் அதிரும்படியும் அசர வைக்கும் படியும் நடந்தது.

கொட்டும் மலையில் எங்கே இவ்வளவு மக்கள் வரப்போகிறார்கள் என்று காவல் துறையும் மற்ற அதிகாரிகளும் நினைத்து அவர்கள் கொண்டு வந்த கைது வாகனங்களின் எண்ணிக்கையில் தெள்ளதெளிவாக தெரிந்தது.
‘என்னையா இவ்வளவுதான் வேன் கொண்டு வந்தீங்களா?’ என்று உயர் அதிகாரி ஒருவர் போலீஸ் அதிகாரிகளை கடிந்து கொண்டது ஆளும் வர்க்கத்தில் உள்ள சில்லரைகள் இம்முற்றுகைப் போராட்டதை குறி மதிப்பிட்டதை பட்டவர்த்தனமாக காட்டியது.

காலை பதினொரு மணியளவில் தொடங்கி மூன்று மணி வரை போராட்டம் நீடித்தது. காலை பதினொரு மணிக்கெல்லாம் கைதுப்படலம் ஆரம்பித்தாலும் ஒரு பக்கம் சகோதர சகோதரிகளை கைது செய்யச் செய்ய, மறுபக்கம், சகோதர சகோதரிகள் வந்து கொண்டிருந்தது காவல் துறையை கடுப்பில் ஆற்றியது.

மக்கள் வெள்ளத்தை சமாளிக்க முடியாமல் அண்ணா சாலையை அடைத்து விட்டு வாகனங்களை மாற்றுப்பாதையில் விடும் போது, அங்கிருந்த உயர் அதிகாரிகளின் முகம் கலை இழந்து காணப்பட்டது.

பாதையை மூடியவுடம் நம் சகோதரர்கள் கொட்டும் மழை என்றும் பார்க்காமல் அப்படியே அண்ணா சாலையில் அமர்ந்தது நம்சகோதரர்களின் அழுத்தமான உணர்வைக்காட்டியது.

காவல்துறை திக்குமுக்காடிப்போனது. ஒரு புறம் கைது நடவடிக்கை நடந்து கொண்டே இருந்தது, மறுபுறம் சகோதரர்கள் மழையில் தொப்பென்று நனைந்ததையும் பொருட்படுத்தாது உரிமைக்கோஷமிட்டுக் கொண்டிருந்தனர்.
அதை அண்ணா சாலையின் மறுபுறமிருந்து சென்ற வாகனங்களில் இருந்த பயணிகள், பேருந்து பயணிகள் ஹார்ன் செய்தும், கை தூக்கிக் காட்டியும் அவர்களின் ஆதரவை அளித்தது கண் கொல்லாக்காட்சியாக இருந்தது.
மேலும் இது நமது சகோதரர்களின் ஊக்கத்தை அதிகரிப்பதாக இருந்தது.

காவல் துறையை கண்டித்து கோஷமிட்ட போது இஸ்லாமியர்கள் அல்லாத பயணிகளின் முகத்திலும் ஒரு புண் சிரிப்பு வந்தது, இது சென்னை குடிமக்களும் பல விஷயங்களில் காவல்துறையால் பாதிக்கப்பட்டதை காட்டியதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

சிறு குழந்தைகளும், இஸ்லாமிய சகோதரிகளும், S.P. பட்டினப் பள்ளியை மூடியதை எதிர்த்து கொட்டும் மழையிலும் வீரமுழக்கம் இட்டது, அனைவரையும் நெகிழ வைத்து விட்டது.

மூன்று மணிவரை இந்தக்கைதுப்படலம் தொடர்ந்து கொண்டே இருந்தது (பதினொரு முதல் மூன்று மணிவரை தொடர்ந்து கைது செய்து கொண்டே இருந்தால் எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டு இருப்பார்கள் என்பதை தங்களின் கணக்கிர்கே விட்டு விடுகிறோம்).

சகோதர சகோதரிகளை முதல்வர் வீட்டு முன் வரை செல்லவிடாமல் தடுத்தாலும் கோபாலபுரம் ரோட்டில் வாகன நெரிசலால் வெறும் வாகனங்களாகவே காணப்பட்டது, ஆகா முதல்வர் வீட்டு முன் வாகன முற்றுகை இட காரணமாக நமது முதல்வர் வீட்டு முற்றுகை அமைந்ததை யாரும் மறுக்க முடியாது.

தமிழக அரசும் காவல் துறையும் இனிமேலாவது பாடம் பெறுமா?..

எல்லாம் வல்ல அல்லாஹ், நம்மிடம் நம்பள்ளியை விரைவில் பெற அருள்புரிவானாக.