ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

குவைத்தில் ரமலானின் கடைசி பத்து இரவுகள்







ரமலான் மாதத்தின் சிறப்பு மிக்க லைலத்துல் கத்ரின் நன்மைகளை ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ரமலானின் கடைசி பத்து இரவுகளில் நமது ஜமாஅத் குவைத் ஹவல்லியில் ஜடியல் பிரிப்பரேசன் பள்ளிக்கூடத்தின் வளாகத்தில் சிறப்பாக ஏற்ப்பாடு செய்திருந்தது. ஒவ்வொரு நாளும் மக்கள் கூட்டம் அலை மோதியது அதிலும் ஒற்றை படை இரவுகளில் ஏற்ப்பாட்டாளர்கள் எப்படி சமாளிப்பது என்று திணறும் அளவிற்கு மக்கள் திரண்டு வந்து ஆர்வமாக கலந்து கொண்டனர்.

மேலும் நபி வழியில் இரவுத் தொழுகையை எவ்வாறு தொழ வேண்டும் என்பதை பலர் இப்போதுதான் தெரிந்து கொண்டோம் என்று சொன்னது நிகழ்ச்சியின் பலனைக் காட்டியது.தொழுகைக்கு பிறகு தாயகத்திலிருந்து வந்திருந்த மேலாண்மைக்குழு உறுப்பினருமான சகோ.அஸ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் தொடர் சொற்ப்பொழிவு நடத்தினார்.

சகோதரரின் உருக்கமான சொற்ப்பொழிவு வந்திருந்த மக்களுக்கு மறுமையைப் பற்றிய பயத்தை அதிகப்படுத்தியது என்றால் அது மிகையாகாது.

மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுமாய் வந்திருந்த மக்களுக்கு ஹோட்டலில் சமைக்கும் உணவு ஸஹர் நேரத்தில் சரிவராது என்று கருதிய நிர்வாகம் மாற்று ஏற்ப்பாடு செய்யும் யோசனையில் இருந்த வேளையில் தாமாக முன் வந்து சமைத்து தருவதாக சொன்ன நம் கொள்கை சகோட்கரர்கள் வடபாதி ஜாபர் தலைமையில் சர்புதீன்,சலாவுதீன் மற்றும் அப்துல் சலாம் ஆகியோரிடம் ஸஹர் உணவு தயாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

சகோதரர்கள் தங்கள் அலுவலக பனி முடித்து வந்தும் அலுப்பில்லாமல் சமையல் வேலைகளை கவனித்துக் கொண்டு அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் தட்டுப்பாடில்லாமல் சுவையான உணவை வழங்கினார்.
மேலும் தொழுகைக்கு வரும் மக்களிடம் சாப்பாட்டிற்கு ஏதாவது கட்டணம் வசூலித்தால் உணவு தட்டுப்பாட்டை தடுக்கலாம் என்று சிலர் கொடுத்த தவறான யோசனையை அல்லாஹ்வின் உதவியால் சகோதரர்கள் தவிடுபொடியாக்கி விட்டனர். அல்ஹம்துலில்லாஹ்...
கட்டணத்தை வசூலித்து மார்கத்தை சொல்லிக்கொடுக்கும் அவல நிலைக்கு அல்லாஹ் ஒருபோதும் நம்மை ஆளாக்க மாட்டான்.வீட்டில் வேலை செய்யும் நம் கொள்கை சகோதரனின் கால் தினார்,அறை தினாரில் அல்லாஹ் நமக்கு அதிகமாகவே பரக்கத்தை வைத்திருக்கிறான் அல்லாஹு அக்பர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக