ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

குவைத்தில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை


குவைத்தில் நபி வலித்தடல் தொழுகை குவைத்தில் நபி வழியில் திடலில் தொழுவதற்கு ஏற்ப்பாடு செய்யுங்கள் என்று பலர் TNTJ வை வற்ப்புறுத்தி வந்தனர் ஒரு நாட்டில் அந்த நாட்டின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு திடல் அடையாளம் காணப்பட்டு அங்கு நபி வழியில் தொழுகை நடத்துவது என்பது எவ்வளவு சிரமம் என்பதை வெளி நாட்டில் பணிபுரிபவர்கள் அறிவர் இருப்பினும் அல்லாஹ் உதவுவான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடு TNTJ குவைத் மண்டலம் அப்பாசியா பகுதியில் இந்தியன் சென்ட்ரல் ஸ்கூல் மைதானத்தில் முதல் முறையாக திடல் தொழுகையை நடத்தியது.

(கடந்த வருடங்களில் உள்ளரங்குகளில் பெருநாள் தொழுகை நடத்தியது குறிப்பிடத்தக்கது.)
பெருநாள் தினமான 20-09-2009 அன்று சரியாக காலை 6.30 மணிக்கு நடந்தது தொடர்ந்து மாநில பேச்சாளரும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினருமான சகோ.அஸ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் குத்பா உரையாற்றினார்
அதன் பிறகு ரமலானில் கடைசி பத்து இரவுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்தவர்களுக்கு முதல் பரிசாக சுப்ரீம் கார்கோ சித்திக் அவர்கள் நூறு கிலோ பொருட்களை இலவசமாக தாயகத்திற்கு அனுப்பி வைக்க ஏற்றுக்கொண்டார்.
இரண்டாவது பரிசும் சுப்ரீம் கார்கோ சித்திக் அவர்களே அம்பது கிலோ எடை பொருட்களை இலவசமாக அனுப்பி வைக்க ஒப்புதல் அளித்தார்
மூன்றாவது பரிசாக ஜஹரா கிளை கொடிக்கால் பாளையத்தை சேர்ந்த சகோ முஜிபுர்ரகுமான் அவர்கள் பதினைந்து தினார் மதிப்புள்ள கைகடிகாரத்தை வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ்...

மேலும் வந்திருந்த மக்கள் இனி எல்லா வருடமும் இது போன்ற திடல் தொழுகைக்கு ஏற்ப்பாடு செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளோடு களைந்து சென்றனர்.

குவைத்தில் ரமலானின் கடைசி பத்து இரவுகள்







ரமலான் மாதத்தின் சிறப்பு மிக்க லைலத்துல் கத்ரின் நன்மைகளை ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ரமலானின் கடைசி பத்து இரவுகளில் நமது ஜமாஅத் குவைத் ஹவல்லியில் ஜடியல் பிரிப்பரேசன் பள்ளிக்கூடத்தின் வளாகத்தில் சிறப்பாக ஏற்ப்பாடு செய்திருந்தது. ஒவ்வொரு நாளும் மக்கள் கூட்டம் அலை மோதியது அதிலும் ஒற்றை படை இரவுகளில் ஏற்ப்பாட்டாளர்கள் எப்படி சமாளிப்பது என்று திணறும் அளவிற்கு மக்கள் திரண்டு வந்து ஆர்வமாக கலந்து கொண்டனர்.

மேலும் நபி வழியில் இரவுத் தொழுகையை எவ்வாறு தொழ வேண்டும் என்பதை பலர் இப்போதுதான் தெரிந்து கொண்டோம் என்று சொன்னது நிகழ்ச்சியின் பலனைக் காட்டியது.தொழுகைக்கு பிறகு தாயகத்திலிருந்து வந்திருந்த மேலாண்மைக்குழு உறுப்பினருமான சகோ.அஸ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் தொடர் சொற்ப்பொழிவு நடத்தினார்.

சகோதரரின் உருக்கமான சொற்ப்பொழிவு வந்திருந்த மக்களுக்கு மறுமையைப் பற்றிய பயத்தை அதிகப்படுத்தியது என்றால் அது மிகையாகாது.

மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுமாய் வந்திருந்த மக்களுக்கு ஹோட்டலில் சமைக்கும் உணவு ஸஹர் நேரத்தில் சரிவராது என்று கருதிய நிர்வாகம் மாற்று ஏற்ப்பாடு செய்யும் யோசனையில் இருந்த வேளையில் தாமாக முன் வந்து சமைத்து தருவதாக சொன்ன நம் கொள்கை சகோட்கரர்கள் வடபாதி ஜாபர் தலைமையில் சர்புதீன்,சலாவுதீன் மற்றும் அப்துல் சலாம் ஆகியோரிடம் ஸஹர் உணவு தயாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

சகோதரர்கள் தங்கள் அலுவலக பனி முடித்து வந்தும் அலுப்பில்லாமல் சமையல் வேலைகளை கவனித்துக் கொண்டு அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் தட்டுப்பாடில்லாமல் சுவையான உணவை வழங்கினார்.
மேலும் தொழுகைக்கு வரும் மக்களிடம் சாப்பாட்டிற்கு ஏதாவது கட்டணம் வசூலித்தால் உணவு தட்டுப்பாட்டை தடுக்கலாம் என்று சிலர் கொடுத்த தவறான யோசனையை அல்லாஹ்வின் உதவியால் சகோதரர்கள் தவிடுபொடியாக்கி விட்டனர். அல்ஹம்துலில்லாஹ்...
கட்டணத்தை வசூலித்து மார்கத்தை சொல்லிக்கொடுக்கும் அவல நிலைக்கு அல்லாஹ் ஒருபோதும் நம்மை ஆளாக்க மாட்டான்.வீட்டில் வேலை செய்யும் நம் கொள்கை சகோதரனின் கால் தினார்,அறை தினாரில் அல்லாஹ் நமக்கு அதிகமாகவே பரக்கத்தை வைத்திருக்கிறான் அல்லாஹு அக்பர்...

ரமளானுக்குப் பின் என்ற தலைப்பில்


ஜஹரா இப்தார் நிகழ்ச்சி கடைசி நோன்பின் இபஃதார் 19-09-2009 சனி அன்று ஜஹராவில் உள்ள ஜம்மியத்துல் துராஸ் லஜ்னாவின் உல் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது அது சமயம் தாயகத்திலிருந்து வந்த தலைமை கழக பேச்சாளரும் மேலாண்மை குழு உறுப்பினருமான சகோ.அஸ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் ரமளானுக்குப் பின் என்ற தலைப்பில் உரையாற்றினார் இந்நிகழ்ச்சியை ஜஹரா கிளை சகோதரர்கள் சிறப்பாக செய்திருந்தனர் இறுதியாக அனைவருக்கும் இபஃதார் உணவு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

தவ்ஹீதை பின் பற்றாத தவ்ஹீத் வாதிகள் மற்றும் இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம்




ரமலானில் கடைசி வெள்ளி 18-09-2009 அன்று தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய அப்பாசியா பகுதியில் உள்ள இந்தியன் சென்ட்ரல் ஸ்கூல் வளாகத்தில் அஸர் தொழுகைக்கு பின் tntj குவைத் மண்டல தலைமை தாயி முஹிபுல்லாஹ் உமரி அவர்கள் தவ்ஹீதை பின் பற்றாத தவ்ஹீத் வாதிகள் என்ற தலைப்பில் உலக ஆதாயத்திற்காக தவ்ஹீத் வேடம் இடுபவர்களின் பட்டியலையிட்டார்.

அதை தொடர்ந்து மாநில பேச்சாளரும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினருமான சகோ.அஸ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம் என்ற தலைப்பில் முழுமையாக இஸ்லாத்தை கடை பிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இதில் பெண்கள் உட்பட சுமார் இருநூற்று ஐம்பது பேர் கலந்து கொண்டு பயனுற்றனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கைதான் கிளை சார்பாக இஃப்தார் உணவு வழங்க பட்டது அப்பாசியா ஏரியாவில் இது போன்ற நிகழ்ச்சிகளை TNTJ அடிக்கடி நடத்த வேண்டும் என்று கலந்துகொண்டோரில் பெரும்பாலோனோர் கேட்டுக்கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

சனி, 26 செப்டம்பர், 2009

நபிகளாரின் இறுதி நாட்கள்




குவைத் ஹவல்லியில் 18-09-2009 (வெள்ளிக்கிழமை) ஜும்ஆத் தொழுகைக்குப் பிறகு நபிகளாரின் இறுதி நாட்கள் என்கிற தலைப்பில் மாநில பேச்சாளரும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினருமான சகோ.அஸ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் சிறப்புரையாற்ற அப்பகுதியை சேர்நத ஏராளமான இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

மரணத்தின் பிடியில் மனிதன்


கடந்த 15 – 09-2009 (செவ்வாய் கிழமை) அன்று டி.என்.டி.ஜே அந்தலுஸ் கிளை ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்சியில் தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்; மாநில பேச்சாளரும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினருமான சகோ.அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் மரணத்தின் பிடியில் மனிதன் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற அதிகமான சகோதரர்கள் கலந்து பயன் அடைந்தனர் இறுதியாக வந்திருவர்கள் அனைவருக்கும் இப்தார் உணவும் பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

புதன், 23 செப்டம்பர், 2009

அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில்




குவைத்தின் கடைசிப் பகுதியான ஜஹராவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ரமலான் சிறப்பு நிகழ்ச்சியாக 11.09.2009 வெள்ளிக்கிழமை கசர் தமிழ் ஜும்ஆப் பள்ளியில் டி.என்.டி.ஜே மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோதரர் அஷ்ரஃப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில் அனைத்து மக்களுக்கும் யார் முன் மாதிரி? முகம்மது நபி (ஸல்) அவர்களை முன் மாதிரியாக ஏற்று வாழ்ந்தால் அகில உலகிற்கும் என்ன என்ன நன்மைகள் என்பதை தெளிவாக விளக்கினார்கள்.

குவைத் மண்டலத்தின் வலுவான கிளைகளில் ஒன்றான ஜஹரா கிளை நிகழ்ச்சி ஏற்பாடுகளை எப்போதும் போல் மிக சிறப்பாக செய்திருந்தார்கள். பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். இறுதியாக ஜஹரா கிளையின் தலைவர் மௌலவி யூசுப் உலவி அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்கள. ஜமியத்துராஸில் லஜ்னாவின் தாயி மௌலவி நவ்ஃபர் அவர்கள் நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து உதவியும் செய்து தந்தார்கள்.

தமிழ் தாயிக்கள் தவ்ஹித் ஜமாத்தின் நிகழ்ச்குவைத்தின் கடைசிப் பகுதியான ஜஹராவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ரமலான் சிறப்பு நிகழ்ச்சியாக 11.09.2009 வெள்ளிக்கிழமை கசர் தமிழ் ஜும்ஆப் பள்ளியில் டி.என்.டி.ஜே மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோதரர் அஷ்ரஃப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில் அனைத்து மக்களுக்கும் யார் முன் மாதிரி? முகம்மது நபி (ஸல்) அவர்களை முன் மாதிரியாக ஏற்று வாழ்ந்தால் அகில உலகிற்கும் என்ன என்ன நன்மைகள் என்பதை தெளிவாக விளக்கினார்கள்.

குவைத் மண்டலத்தின் வலுவான கிளைகளில் ஒன்றான ஜஹரா கிளை நிகழ்ச்சி ஏற்பாடுகளை எப்போதும் போல் மிக சிறப்பாக செய்திருந்தார்கள். பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

இறுதியாக ஜஹரா கிளையின் தலைவர் மௌலவி யூசுப் உலவி அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்கள. ஜமியத்துராஸில் லஜ்னாவின் தாயி மௌலவி நவ்ஃபர் அவர்கள் நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து உதவியும் செய்து தந்தார்கள்.

குவைத்தில் வாழும் தமிழ் நாட்டு தாயிக்கள் தவ்ஹித் ஜமாத்தின் நிகழ்ச்சிகளுக்கு இடையூறு செய்து வரும் வேளையில் இலங்கை தாயிக்கள் ஆர்வமாக உதவி செய்து வருவது பாராட்டுக்குரியது. அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் மாதத்தின் சிறப்புகளும் கடைபிடிக்க வேண்டிய அமல்களும்




குவைத் ஹதியாவில் மப்ரத்துத் தவாஸில் கைரிய்யா லஜ்னாவும், தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் ஹதியா கிளையும் இணைந்து 7.09.2009 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரமலான் ஸஹர் நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள டி.என்.டி.ஜே மாநில பேச்சாளரும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினருமான சகோ. அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் ரமலான் மாதத்தின் சிறப்புகளும் கடைபிடிக்க வேண்டிய அமல்களும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்குரிய ஏற்பாடுகளையெல்லாம் லஜ்னாவும், ஹதியா கிளை சகோதரர்களும் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.

வந்திருந்த அனைவருக்கும் ஸஹர் உணவும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பேராசை என்ற தலைப்பில்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தைய்யா கிளையின் சார்பாக 4.09.2009 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்கு பின் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள மாநில பேச்சாளரும், மாநில தலைமை மேலாண்மைக்குழு உறுப்பினருமான சகோ. அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் பேராசை என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற 100க்கும் மேற்பட்டோர் கலந்து பயன்அடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்

அலட்சியப் படுத்தப்படும் நபி வழிகள் மற்றும் ஈமானை வலுப்படுத்த ஓர் வழி




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் இப்தார் நிகழ்ச்சி 11.09.2009 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் பயான் மர்யம் பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.


பயான் முஷ்ரிப் கிளையின் செயலாளர் ஜியாவுதீன் அவர்களின் வரவேற்புரையோடு தொடங்கியது. குவைத் மண்டல தலைமை தாயி முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் ஈமானை வலுப்படுத்த ஓர் வழி என்ற தலைப்பில் ஒவ்வொரு நிமிடமும் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்து கொள்வதே ஈமானை வலுப்படுத்த ஓர் வழி என்று ஆவேசமாக ஆற்றிய உரை அனைவரையும் சிந்திக்க வைத்தது.


அதைத் தொடர்ந்து தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோதரார் டி.என்.டி.ஜே மாநில பேச்சாளர் அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் அலட்சியப்படுத்தப்படும் நபி வழிகள் என்ற தலைப்பில் நாம் அசட்டையாக தவறவிடும் நபிவழிகளை மிகவும் அழகுற சுட்டிக் காட்டினார்கள்.
சுமார் 200க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பயான் முஸ்ரிப் கிளையினர் மிகவும் சிறப்பபாக செய்திருந்தார்கள். இறுதியாக குவைத் மண்டல துணை செயலாளர் ஜின்னா அவர்கள் நன்றி கூறினார்.


இப்தார் உணவுடன் நிகழ்ச்சி பயனள்ளதாக அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்

திங்கள், 7 செப்டம்பர், 2009

இஸ்லாம் கூறும் மனித நேயம்


குவைத் அம்கரா கேம்பில் உள்ள ஐ.பி.சி நிலையத்தின் உறுதுணையோடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குவைத் மண்டலம் ஜெஹரா கிளையினர்
5-09-2009 சனிக்கிழமை ; ஏற்பாடு செய்திருந்த இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் முஸ்லிம், முஸ்லிமல்லாத சகோதரர்கள் என இரு தரப்பாரும் வருகை புரிந்திருந்தனர்.

நிகழ்ச்சியை ஐ.பி.சி. நிலையத்தில் பணியாற்றுகின்ற இஸ்லாமிய அழைப்பாளர் சகோ.நளீம் அவர்கள் வரவேற்புரையாற்றி துவக்கி வைத்ததைத் தொடர்ந்து இஸ்லாம் கூறும் மனித நேயம் என்ற தலைப்பில் தாயகத்திலிருந்து குவைத்திற்கு வருகை புரிந்துள்ள டி.என்.டி.ஜே மாநில பேச்சாளரும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினருமானசகோ.அஷ்ரஃப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இறுதியாக ஜெஹரா கிளையின் தலைவர்முகம்மது யூசுப் உலவி அவர்கள் நன்றியுரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.இந்நிகழ்ச்சிக்கு 50க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து பயன் பெற்று சென்றனர்.அல்ஹம்துலில்லாஹ்.

என்னைக் கவர்ந்த இஸ்லாம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குவைத் மண்டலம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்ச்சி 4-09-2009 வெள்ளிக்கிழமை பின்தாஸில் உள்ள இந்தியன் கம்யூனிட்டி ஹாலில் அஸர் தொழுகைக்கு பின் தொடங்கியது.

குவைத் மண்டல தாயிகளில் ஒருவரான முகம்மது கான் வரவேற்புரையாற்ற மண்டல தலைவர் ராஜா அகமது தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் தொடக்கமாக நாங்கள் எப்படி இஸ்லாத்தால் கவரப்பட்டோம்? என்பதை புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்கள் விளக்கினார்கள்.

முதலாவதாக சகோ.அமீர் அவர்கள் தான் இஸ்லாத்தில் வந்ததை உருக்கமாக விளக்கினார்.

அடுத்து கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்த சகோதரி ரஹீமா அவர்கள் நான் விவாதம் செய்து தான் இஸ்லாத்தை ஏற்றேன். என்னை இஸ்லாம் கவர்ந்த அளவிற்கு இஸ்லாமியர்கள் கவரவில்லை எனக் கூறியது அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை சிந்திக்க வைத்தது.

அடுத்து இஸ்லாத்தை தழுவிய சகோ அப்துஸ்ஸமத் அவர்கள் குவைத் நாட்டுக்காரர் பணம் தருகிறேன் என ஆசை காட்டிய போதெல்லாம் ஈர்க்கப்படாத இஸ்லாம் பீ.ஜே மொழிபெயர்த்த குர்ஆனை படித்த போது ஈர்த்தது என்றார்.

அடுத்து இஸ்லாத்தை தழுவிய சகோ முகம்மது யூசுப் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

இதனிடையே இந்நிகழச்சிக்கு உறுதுணையாக இருந்த மப்ரஅத்துத் தவாஸில் கைரிய்யாவின் நிறுவனர் அபுநயீஃப் அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

அடுத்ததாக இஸ்லாத்தை தழுவிய சகோ.சித்தீக் அவர்கள் நான் இஸ்லாத்தை தழுவுவதற்கு யார் காரணமாக இருந்தாலும் இஸ்லாம் இவ்வளவு அருமையான மார்க்கம் என்பதை டி.என்.டி.ஜே தலைமையில் நடைபெறும் மூன்று மாத வகுப்பில் சேர்ந்த பின்பு தான் அறிந்து கொண்டேன் என்று கூறியது உள்ளத்தை தொடும் விதமாக இருந்தது.

அடுத்ததாக இஸ்லாத்தை ஏற்ற சகோ. அப்துல்லாஹ் அவர்கள் தான் இஸ்லாத்தை ஏற்றதற்காக இவன் தீவிரவாதியாக மாற்றப்பட்டு விட்டதாக கூறினர்.அதனையெல்லாம் இஸ்லாம் ஏவவில்லை என்பதை எளிய முறையில் விளக்கினார்.

அடுத்து இஸ்லாத்தை தழுவிய சகோ.முகம்மது ஷரீஃப் அவர்கள் தன்னை பீ.ஜே அவர்களின் எளிமையான விளக்கம் என்னை மிகவும் கவர்ந்ததாக கூறினார்.

இந்நிகழ்ச்சி அனைத்தையும் மேலாண்மைக்குழு உறுப்பினர் பொறியாளர் சாகுல் அப்துல் ஹமீது அவர்கள் தொகுத்து வழங்கினார்.

இப்தாருக்குப்பின் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள மாநில பேச்சாளரும், மாநில தலைமை மேலாண்மைக்குழு உறுப்பினருமான சகோ. அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி நற்குணமும் நன்னடத்தையும் அழைப்புப் பணிக்கு அவசியம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

இறுதியாக குவைத் மண்டல தலைமை தாயி முஹிப்புல்லாஹ் உமரி நன்றியுரையாற்றி நிகழ்ச்சியை இனிதே நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் 50 பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இப்தார் உணவும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்