
குவைத்தில் நபி வலித்தடல் தொழுகை குவைத்தில் நபி வழியில் திடலில் தொழுவதற்கு ஏற்ப்பாடு செய்யுங்கள் என்று பலர் TNTJ வை வற்ப்புறுத்தி வந்தனர் ஒரு நாட்டில் அந்த நாட்டின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு திடல் அடையாளம் காணப்பட்டு அங்கு நபி வழியில் தொழுகை நடத்துவது என்பது எவ்வளவு சிரமம் என்பதை வெளி நாட்டில் பணிபுரிபவர்கள் அறிவர் இருப்பினும் அல்லாஹ் உதவுவான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடு TNTJ குவைத் மண்டலம் அப்பாசியா பகுதியில் இந்தியன் சென்ட்ரல் ஸ்கூல் மைதானத்தில் முதல் முறையாக திடல் தொழுகையை நடத்தியது.(கடந்த வருடங்களில் உள்ளரங்குகளில் பெருநாள் தொழுகை நடத்தியது குறிப்பிடத்தக்கது.)
பெருநாள் தினமான 20-09-2009 அன்று சரியாக காலை 6.30 மணிக்கு நடந்தது தொடர்ந்து மாநில பேச்சாளரும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினருமான சகோ.அஸ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் குத்பா உரையாற்றினார்
அதன் பிறகு ரமலானில் கடைசி பத்து இரவுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்தவர்களுக்கு முதல் பரிசாக சுப்ரீம் கார்கோ சித்திக் அவர்கள் நூறு கிலோ பொருட்களை இலவசமாக தாயகத்திற்கு அனுப்பி வைக்க ஏற்றுக்கொண்டார்.
அதன் பிறகு ரமலானில் கடைசி பத்து இரவுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்தவர்களுக்கு முதல் பரிசாக சுப்ரீம் கார்கோ சித்திக் அவர்கள் நூறு கிலோ பொருட்களை இலவசமாக தாயகத்திற்கு அனுப்பி வைக்க ஏற்றுக்கொண்டார்.
இரண்டாவது பரிசும் சுப்ரீம் கார்கோ சித்திக் அவர்களே அம்பது கிலோ எடை பொருட்களை இலவசமாக அனுப்பி வைக்க ஒப்புதல் அளித்தார்
மூன்றாவது பரிசாக ஜஹரா கிளை கொடிக்கால் பாளையத்தை சேர்ந்த சகோ முஜிபுர்ரகுமான் அவர்கள் பதினைந்து தினார் மதிப்புள்ள கைகடிகாரத்தை வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ்...
மேலும் வந்திருந்த மக்கள் இனி எல்லா வருடமும் இது போன்ற திடல் தொழுகைக்கு ஏற்ப்பாடு செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளோடு களைந்து சென்றனர்.






















