செவ்வாய், 22 டிசம்பர், 2009

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை! எப்போது அமலுக்கு வரும்?


முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினர்களின் நலன்களை பாதுகாக்கும் பொருட்டும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட அளவு ஒதுக்கீட்டை அளிக்கும் பொருட்டு 2004ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் இந்த கமிஷன் அமைக்கப்பட்டது. இக்கமிஷன் தன்னுடைய அறிக்கையை 2007ல் பிரதமரிடம் சமர்பித்தது. இவ்வளவு நாள் வரை கிடப்பில் போடப்பட்ட இவ்வறிக்கை, மக்களவையின் கடைசி நாளான கடந்த 18.12.2009 இந்த அறிக்கையை சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் தாக்கல் செய்துள்ளார்.

மத்திய, மாநில அரசுகளின் வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடும், மற்ற சிறுபான்மையினருக்கு 5 சதவீத ஒதுக்கீடும் வழங்கலாம் என நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான கமிஷன் பரிந்துரை அளித்துள்ளது. சிறுபான்மையினர் என்று அடையாளப்படுபவர் அனைத்து வகையான மத, மொழிவாரி மக்களை சிறுபான்மையினர் என்று அடையாளப்படுத்தப்பட்டது. சிறுபான்மையினர் என்றால் இந்துத்துவ சக்திகள் இவ்வறிக்கையை எதிர்பதாக பத்ரிகையில் பேட்டியளித்துள்ளார்கள். ஆனால், இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் கஷ்மீர், அஸாம், மேலாய போன்ற மாநிலத்தில் குறைவாக உள்ளதால் இந்துக்களும் சிறுபான்மையினராக கருதப்பட்டு இவர்களும் இந்த இடஒதுக்கிட்டில் பயன் பெறுவார்கள் என்று நீதிபதி விவரித்துள்ளார்கள்.


அரசு வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளில் சிறுபான்மை, பெருபான்மை என்ற வேறுபாடுகளை களையடுக்கும் விதமாக சமவாய்ப்பு ஆனையத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறித்தியுள்ளார். மேலும் நீதியரசர் சச்சார் அறிக்கையில் தெரிவித்தவாறு, அரசு நலத்திட்டங்கள் யாவும் முஸ்லீம்களுக்கு சென்றடைவதில்லை என்றும் அதை களையடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். மேலும் சிறுபான்மை அதிகமாக வழும் பகுதிகளையும் வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறித்தியுள்ளது.


இந்திய முஸ்லீம்கள் இவ்வரிக்கையை வரவேற்கும் அதே வேளையில் ஆளும் வர்கத்தினர் முஸ்லீம்களின் நியமான உணர்வுகளை புரிந்துக் கொண்டு, உடனே இவ்வரிக்கையில் கூறப்பட்டவாறு சிறுபான்மையினர்களுக்கு என்று தனி இட ஒதுக்கிட்டை உடனே வழங்க வேண்டும்.


காங்கிரஸ், லாலுவின் ராஷ்டிரியா ஜனதா தளம், பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிகளும் இதை வரவேற்றுள்ளன. இந்த அறிக்கையை மக்களைவையில் சமர்பிக்க வேண்டும் என்று பல முறை லாலு பிரசாத் அவர்கள் மக்களவையில் குரல் எழுப்பினார் என்பது குறிப்பிட தக்கது.


ஆதே வேளையில் இவ்வரிக்கை வெளியிட எவ்வாறு குரல் எழுப்பினாரே அவ்வாரே இதை சட்டமாக்கும் வரை அவர் தெடர்ந்து மக்களைவில் குரல் எழுப்பி போராடுவார் என்று எதிர்பார்க்கிறோம்.


இவ்வளவு பட்டவர்தனமாக முஸ்லிம்களின் நிலைமை தெளிபடுத்தபட்ட பிறகும் ஆளும் கட்சிகள் இதை புறக்கனித்து, காலத்தை தாமதித்தால், முஸ்லிம்கள் கடும் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். முஸ்லீம்கள் இதை ஒரு போதும் மண்ணிக்க மாட்டார்கள். அவர்களுக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள். அளுபவரின் நடவடிக்கை என்ன என்பதை பெருத்திருந்து பார்ப்போம்…


வழக்கம் போல், பி.ஜே.பி எதிர்க்கிறது. இங்கு சிறுபான்மையினர் என்று அழைப்பது காஷ்மிர், அஸாம், மிசோராம், மேகலாய பேன்ற மாநிலங்களில் இந்து மதத்தை பின்பற்றுபவர்களை தான் என்று தெரியவில்லை போல! இந்துக்களையே எதிர்க்கும் இந்துத்துவ கட்சி பி.ஜே.பி யாகத்தான் இருக்க முடியும்.


இவர்களை பிடித்துள்ள மத வெறி, இவர்களை ஒருகாலும் சிந்திக்க விடாது போல இருக்கு…


செய்தி: முகானே தவ்பீக் – தம்மாம் மண்டலம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக