கடந்த 18-12-2009 (வெள்ளிக்கிழமை) குவைத் மண்டலம் அந்தலூஸ் கிளை ஏற்ப்பாடு செய்திருந்த மார்க்க சொற்ப்பொழிவு அந்தலோசில் உள்ள மஸ்ஜிதுன் அமீரியில் வெகு சிறப்பாக நடைப் பெற்றது. நபி வழியா? புது வழியா? என்ற தலைப்பில் தாயகத்திலிருந்து வந்திருந்த இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் அப்துல் கரீம் MISc அவர்கள் சிர்க்,கந்தூரி,கூட்டு,துவா,முறையற்ற தொழுகை,மீலாது விழா,மிஹ்ராஜ்,பராத்,மௌலூது,போன்ற புதுமைகளை பட்டியலிட்டு இவையெல்லாம் நம்மை வழிகேட்டில் கொண்டு சென்றிருக்கும் விஷயங்கள் என்பதை அழகாக தெளிவுபடுத்தினார்.வந்திருந்த மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனுற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்.
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – வட சென்னை மாவட்டம்
-
இறைவனின் திருப்பெயரால் … சென்னையில் வழிபாட்டுத் தல பாதுகாப்பு சட்டத்தை
நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், ஐந்து அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை
செய்யப்பட்டதை க...
ஆழ் கடலின் அலையும் இறைவேதத்தின் நிரூபணமும்
-
*கடலின் மேற்ப்பரப்பில் அலைகள் தவழ்வதை அனைவரும் அறிந்துள்ளனர். ஆனால்
ஆழ்கடலுக்கு உள்ளேயும் அலைகள் உள்ளன. கடலின் ஆழத்தில் ஏற்ப்படும் பேரலைகள்
சுனாமியாகச் சீ...
14 ஆண்டுகள் முன்பு
இந்த வருட ஃபித்ரா மற்றும் ஜகாத் வசூல் விபரம்
TNTJ-KUWAIT
முக்கிய அறிவிப்பு
குவைத்தில் சில அமைப்புகள் மற்றும் நமது தாயிகள் பேசிய சிடிக்கள் மற்றும் புத்தகங்களை விற்று பிழைப்பு நடத்தும் போலி தவ்ஹீத் வாதிகள் தவ்ஹீத் என்ற பெயரை இணைத்துக் கொண்டு சில அறியாத மக்களிடம் தாங்களும் TNTJ வினர் தான் என்று ஏமாற்றி ஃபித்ரா மற்றும் ஜகாத் வசூல் செய்கின்றனர் எனவே மக்கள் யாரும் போலி தவ்ஹீத் வாதிகளை கண்டு ஏமாற வேண்டாம்.
TNTJ-KUWAIT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக