சனி, 7 நவம்பர், 2009

குவைத் மண்டலம் நடத்திய மூன்றாவது மாபெரும் இரத்த தான முகாம்.







அல்லாஹ்வின் பேருதவியால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் தனது மூன்றாவது மாபெரும் இரத்த தான முகாமை 6-11-2009 (வெள்ளிக்கிழமை) குவைத் ஜப்ரியாவில் உள்ள மத்திய இரத்த வங்கியில் மண்டல மருத்துவ அணி பொறுப்பாளர்கள் சித்திக் மற்றும் ஜெகபர் அவர்களின் தலைமையில் நடத்தி முடித்திருக்கிறது. சுமார் 130 சகோதரர்கள் இரத்த தானம் செய்தனர்.அல்லாஹு அக்பர்.

கடந்த வருடங்களில் நிர்வாகிகள் இரத்த வங்கியை அணுகி விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையில் முகாம் நடத்த அனுமதி கேட்டு மறுக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்குப் பிறகு அனுமதி பெற்று நடத்தினார்கள்.

ஆனால் இந்த வருடம் எல்லாம் வல்ல இறைவன் அந்த வரலாற்றை மாற்றி அமைத்துள்ளான்.ஆம் குவைத் இரத்த வங்கி அதிகாரிகளே நம் மண்டல நிர்வாகிகளை அணுகி இரத்த வங்கியில் இரத்த தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளதால் இரத்தம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையை நமக்கு ஒதுக்கித்தருவதாகவும் தாங்களே முன் வந்ததோடு ஒரு நிபந்தனையும் வைத்தனர்.

கடந்த முறை போல் ஒரே நேரத்தில் முன்னூறு நானூறு பேர் வந்தால் அவ்வளவு பேருக்கும் ஒரே நேரத்தில் இரத்தம் எடுக்கும் சவுகரியம் தங்களிடத்தில் இல்லாததால் நூறு பேர் மட்டும் வாருங்கள்,மறுபடியும் எத்தனை வெள்ளிக்கிழமை வேண்டுமானாலும் ஒதுக்கித்தருகிறோம் மற்றவர்களை அப்போது அழைத்து வாருங்கள் என்றனர்.

அதன்படி யாருக்கும் சிரமம் கொடுக்க விரும்பாத நமது ஜமாஅத் நிர்வாகிகள் சரி என்று ஒப்புக்கொண்டனர்.

எனவே நூறு பேர் மட்டும் 6-11-2009 வெள்ளிக்கிழமையும்,
மற்றவர்கள் 4-12-2009 வெள்ளிக்கிழமையும் இரத்தம் வழங்க ஏற்பாடு செய்வது என தீர்மானித்து மண்டல மருத்துவ அணியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு சிறப்பாக நடந்தேறியது.அல்லாஹு அக்பர்

குவைத் மத்திய இரத்த வங்கியின் இரத்தம் எடுக்கும் பிரிவு பொறுப்பாளர் டாக்டர் நபீல் முகம்மது அப்துல் ரஹீம் நம்மிடம் கூறுகையில்,தனது வாழ்நாளில் இப்படி தன்னார்வத்தோடும், அமைதியாகவும், போட்டிப் போட்டுக் கொண்டு மறுமையை மட்டுமே இலக்காக கொண்டு,இரத்த தானம் செய்யும் ஒரு கூட்டத்தை இப்பொழுதுதான் பார்க்கிறேன் என்றார்.

அதுமட்டுமல்லாது இரத்தத்தை வியர்வையாக சிந்தி பிழைப்பு நடத்தும் இந்த சகோதரர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு இரத்த தானம் செய்வது தனக்கு நெகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். அல்ஹம்துலில்லாஹ்!

தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் இரத்த தானம் செய்துகொண்டிருந்த போது பாகிஸ்த்தானை சேர்ந்த அஷார் முகம்மது என்பவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் தனது சகோதரர் அக்தர் முகம்மதுக்கு அவசரமாக இரத்தம் தேவை ஏற்ப்பட்டதால் ஜமாஅத் நிர்வாகிகளை அணுகினார்,உடனே குவைத் மண்டல முன்னாள் செயலாளர் உசேன் பாபு அந்த சகோதரருக்கு இரத்தம் வழங்கினார்.

இலங்கையை சேர்ந்த சகோதரர் c.m.p.முகம்மது என்ற சகோதரர் நம்மிடம் கூறுகையில் தானக்கு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தோடு சேர்ந்து இது போன்ற சேவைகளில் ஈடுபடுவது பெரும் மகிழ்ச்சியை கொடுப்பதாகவும்,தான் சகோதரர் பி.ஜெ.அவர்களின் ஓலி நாடாக்களை கேட்டுத்தான் தூய இஸ்லாத்தை தெரிந்துகொண்டதாகவும்,பதினைந்து வருடத்திற்கு முன்பு க்ளோரியா மார்த்தா என்ற பெங்களூரை சேர்ந்த ஒரு கிருத்துவ பெண்மணிதான் பி.ஜெ.அவர்களின் ஓலி நாடாவை கொடுத்து இவர் எவ்வளவு அழகாக இஸ்லாத்தை சொல்லியிருக்கிறார் கேட்டுப்பார் என்று கொடுத்ததாகவும் கூறினார்.

மேலும் லஜ்னா தவாசிலை சேர்ந்த குவைத்திகளும்,எகிப்து நாட்டவர்களும்,மற்றும் இஸ்லாம் அல்லாத சகோதரர்களும் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தது குறிப்பிடத்தக்கது.

10 கருத்துகள்:

  1. ஸலாம்....

    அப்ப நீங்க செய்றதுதான் ஒசத்தி...

    இத அல்லாஹ்வுக்காக நீங்க செய்யல அப்படித்தானே....

    நாங்க ஆர்ப்பாட்டம் ஆடம்பரம் இல்லாம பல வருசம் இரத்த தானம் குடுக்குறோம்...

    எத செஞ்சாலும் அல்லாஹ்வுக்காக செய்யுங்க....

    உங்க தலைவன் வழியில பேருக்கும் புகழுக்கும் ஆசப்படாதீங்க....

    திருச்சி ஏ. முஹமது சமீர், TMCA, குவைத்

    பதிலளிநீக்கு
  2. ---குவைத் இரத்த வங்கி அதிகாரிகளே நம் மண்டல நிர்வாகிகளை அணுகி இரத்த வங்கியில் இரத்த தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளதால் இரத்தம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.---

    கேக்குறவன் கேனயா இருந்தா கேப்பைல நெய் வடியதுன்னு இல்ல... இல்ல... வெள்ளமா ஓடுதுன்னு சொல்வீங்க போல.... எந்த அதிகாரி உங்கட்ட வந்து கெஞ்சுனாருன்னு சொல்ல முடியுமா? நீங்க நடத்துறதே விளம்பர முகாம்... இது தெரிஞ்சா அந்த அதிகாரியே உங்கள நைய புடச்சிடுவாரு தெரியும்லே...
    ---------------------------------------------

    ---- குவைத் மத்திய இரத்த வங்கியின் இரத்தம் எடுக்கும் பிரிவு பொறுப்பாளர் டாக்டர் நபீல் முகம்மது அப்துல் ரஹீம் நம்மிடம் கூறுகையில்,தனது வாழ்நாளில் இப்படி தன்னார்வத்தோடும், அமைதியாகவும், போட்டிப் போட்டுக் கொண்டு மறுமையை மட்டுமே இலக்காக கொண்டு,இரத்த தானம் செய்யும் ஒரு கூட்டத்தை இப்பொழுதுதான் பார்க்கிறேன் என்றார்.

    அதுமட்டுமல்லாது இரத்தத்தை வியர்வையாக சிந்தி பிழைப்பு நடத்தும் இந்த சகோதரர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு இரத்த தானம் செய்வது தனக்கு நெகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். ----
    அப்ப நாங்க (tmca) கொடுத்தப்பவும் இதே மாதிரி சொன்னாரே.. யார் ரத்தம் குடுத்தாலும் அங்குள்ள அதிகாரிங்க அப்படித்தான் வாழ்த்து சொல்வாங்க... அதப்போய் தங்களுக்கு மட்டும் கெடச்ச அங்கீகாரம்னு எடுத்துகிட்டா உங்கள போல பைத்தியக்காரங்க யாரும் இருக்க முடியாது.

    -----------------------------------------

    ---தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் இரத்த தானம் செய்துகொண்டிருந்த போது பாகிஸ்த்தானை சேர்ந்த அஷார் முகம்மது என்பவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் தனது சகோதரர் அக்தர் முகம்மதுக்கு அவசரமாக இரத்தம் தேவை ஏற்ப்பட்டதால் ஜமாஅத் நிர்வாகிகளை அணுகினார்,உடனே குவைத் மண்டல முன்னாள் செயலாளர் உசேன் பாபு அந்த சகோதரருக்கு இரத்தம் வழங்கினார்.---
    குவைத்ல யாருக்காவது ரத்தம் தேவைப்பட்டா அவர் இரத்த வங்கியிலதான் அத வாங்கிக்கனும். நேரிடையா ரத்தம் குடுக்க முடியாது. எந்த குருப் ரத்தம் உள்ளவங்களும் குடுத்து உதவலாம். அத வாங்கிட்டு தேவையுள்ளவங்களுக்கு தேவைப்படற குருப்பை கொடுப்பாங்க.... இதுதான் உண்மை... இத உட்டுட்டு அவருக்கு ரத்தம் தேவப்பட்டிச்சாம் இவரு உடனே குடுத்தாராம்... தலைவன் PJ மாதிரியே கூட கூடயா பூ சுத்துறீங்களே... அல்லாஹ்வுக்கு பயந்து எதயும் சொல்லுங்கப்பு.. இந்த மாதிரி குவைத் நிலவரம் தெரியாமா எழுதி மாட்டிக்க போறீங்க...
    ----------------------------------------
    ---மேலும் லஜ்னா தவாசிலை சேர்ந்த குவைத்திகளும்,எகிப்து நாட்டவர்களும்,மற்றும் இஸ்லாம் அல்லாத சகோதரர்களும் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தது குறிப்பிடத்தக்கது.--

    டெய்லி அந்த இடத்துல நிறய பேரு ரத்தம் குடுக்காறுங்க.... நீங்க போன அன்னிக்கும் அவங்க வந்திருப்பாங்க... அத போய் ஏதோ TNTJ சேவய பார்த்துட்டு வந்துதான் குடுத்தாங்கன்னு மனப்பால் குடிக்காதீங்க... உங்க கொள்கைய அவங்ககிட்ட சொல்லுங்க... அப்புறம் என்ன நடக்குதுன்னு தெரியும்?

    ஒழுங்கா பொழக்க வந்தோமா? ஹலாலா சம்பாரிச்சு ஹலாலா செலவு பண்ணிநோமா என்றில்லாமல் இந்த கொள்கயில இருந்துட்டு உங்கள நீங்கள ஏமாதிகிட்டு மறுமை வாழ்வை பாழ் பண்ணிக்காதீங்க....
    - அக்பர், குவைத்

    பதிலளிநீக்கு
  3. பொய்யான பெயரில்,தான் சாராத ஒரு அமைப்பின் பெயரை பயன்படுத்தி ஒரு முனாஃபிக் தனது கருத்தை சலாத்தோடு ஆரம்பித்து இருக்கிறார் ஆச்சர்யம்தான்,
    வ அலைக்கும் ஸலாம்.

    இந்த கருத்தை படித்த உடனேயே TMCA வின் செயலாளர் சகோதரர் அலீம் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு யார் இந்த திருச்சி முகம்மது சமீர் என்று கேட்டோம் அப்படி யாரும் இல்லை,நமக்குள் பிரச்சனையை உருவாக்கி TMCA வின் பெயரை கெடுக்க எவனோ முனாஃபிக் இப்படி எழுதி இருக்கிறான் என்று சொன்னார்.

    சரி இப்பொழுது ஃபித்னாக்கு பதில்:

    தர்மங்களை நீங்கள் வெளிப்படையாக செய்தால் அது நல்லதே.அதை(ப்பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச்சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (2;271) (அல்லாஹ் சொன்னதுபோல்தான் செய்திருக்கிறோம்.)

    பிறகு நாங்கள் பல வருடங்களாக ஆர்ப்பாட்டமில்லாமல் இரத்த தானம் செய்கிறோம் என்று யாரோ பெற்ற பிள்ளைக்கு தான்தான் அப்பன் என்பது போல் தனக்கு சம்பந்தம் இல்லாத இயக்கத்தின் செயலை தானும் சேர்ந்து செய்ததுபோல் சொல்லியிருக்கிறார்.

    உங்களுக்கு செய்ய வக்கு இல்லை என்றால் செய்பவர்களை குறை சொல்ல புறப்பட்ட நீங்கள் உண்மையான முகத்தோடும்,பெயரோடும் வாருங்கள்.

    பிறகு உங்கள் தலைவன் வழியில் பேருக்கும் புகழுக்கும் ஆசை படாதீர்கள் சொல்லியிருக்கிறார்.

    சகோதரரே எங்கள் தலைவர் ரசூல்(ஸல்) எந்த பேருக்கும்,எந்த புகழுக்கும் ஆசைப்பட்டார்?

    ஒருவேளை எங்கள் அமைப்பின் மாநில தலைவர் அல்தாஃபி அவர்களை சொல்கிறீர்களா?

    உங்களை போல் கேவலாமாக யாரோ செய்த செயலை நீங்கள் செய்ததாக பெருமை தேட பார்கிறீர்களே அதை போல் ஏதாவது செய்தாரா?

    பதிலளிநீக்கு
  4. திருச்சி ஏ. முஹமது சமீர்9 நவம்பர், 2009 அன்று PM 9:43

    ஸலாம்...

    ரொம்ப நன்றி நிர்வாகி அவர்களே! (மண்டல நிர்வாகியா? இணையதள நிர்வாகியா?)

    ---தான் சாராத ஒரு அமைப்பின் பெயரை பயன்படுத்தி ஒரு முனாஃபிக்...---

    யார் சொன்னது? குவைத்ல இருக்குற எல்லா தமிழக முஸ்லிம்களுக்கும் நம்ம TMCA சொந்தம் என்று தங்களுக்கு தெரியுமா? உறுப்பினராக ஆகித்தான் செய்ய வேண்டும் என்பதில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
    -----------------------------

    ---இந்த கருத்தை படித்த உடனேயே TMCA வின் செயலாளர் சகோதரர் அலீம் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு யார் இந்த திருச்சி முகம்மது சமீர் என்று கேட்டோம் அப்படி யாரும் இல்லை,நமக்குள் பிரச்சனையை உருவாக்கி TMCA வின் பெயரை கெடுக்க எவனோ முனாஃபிக் இப்படி எழுதி இருக்கிறான் என்று சொன்னார்.---

    ஏங்க.. TMCAவை பாராட்டித்தான் எழுதியுள்ளேன். அது தப்புங்களா? அப்ப TMCA, TNTJ எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா? இத்தன நாளு இது தெரியாம போச்சே?
    ----------------------------------------

    ---சகோதரரே எங்கள் தலைவர் ரசூல்(ஸல்) எந்த பேருக்கும்,எந்த புகழுக்கும் ஆசைப்பட்டார்? ஒருவேளை எங்கள் அமைப்பின் மாநில தலைவர் அல்தாஃபி அவர்களை சொல்கிறீர்களா?---

    சந்தடி சாக்குல ரசூலுல்லாஹ் மட்டும் தலைவர் இல்ல... எங்களுக்கு மாநில தலைவரும் உண்டு என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி! (இப்படி மாநிலம், மண்டலம் என்றெல்லாம் ரசூலுல்லாஹ் காலத்தில் இருந்தது பாருங்க...?)
    ------------------------------

    ---யாரோ பெற்ற பிள்ளைக்கு தான்தான் அப்பன் என்பது போல் தனக்கு சம்பந்தம் இல்லாத இயக்கத்தின் செயலை தானும் சேர்ந்து ... உங்களை போல் கேவலாமாக யாரோ செய்த செயலை நீங்கள் செய்ததாக பெருமை தேட பார்கிறீர்களே அதை போல் ஏதாவது செய்தாரா?---

    அப்படின்னா நமக்கு கிடைத்த 3.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு தமுமுகதான் காரணம் அப்படின்னு தெரிஞ்சிருந்தம் TNTJதான் காரணம் அப்படின்னு சொன்னீங்களே? அது மட்டும் என்னவாம்?

    - திருச்சி ஏ. முஹமது சமீர், TMCA, குவைத்

    பதிலளிநீக்கு
  5. இந்த சாக்கடை மற்றவர்களை ஒரு குட்டைல ஊறுன மாட்டிங்குது முதல்ல TMCA வுடன் சிண்டு முடிக்க பார்த்தது இப்போ TMMK செய்யாத ஒன்றை செய்தாதாக கருத்து திணிப்பு செய்யுது இதுமாரி புறம்போக்கு கடைசிவரை தன்னை யாருன்னு காட்டிக்காது இதுக்கெல்லாம் பதில் எழுதி உங்கள் நேரத்தை வீணடித்து கொள்ளாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. சகோதரர்களே இவர்கள் எழுதி இருப்பது கருத்து இல்லை, இவர்களால் செய்ய இயலாததை நாங்கள் செய்ததால் வெளிப்படுத்தும் வயிற்றெரிச்சல்.

    செய்தி
    ---குவைத் இரத்த வங்கி அதிகாரிகளே நம் மண்டல நிர்வாகிகளை அணுகி இரத்த வங்கியில் இரத்த தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளதால் இரத்தம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.---

    வயிற்றெரிச்சல் 1:
    கேக்குறவன் கேனயா இருந்தா கேப்பைல நெய் வடியதுன்னு இல்ல... இல்ல... வெள்ளமா ஓடுதுன்னு சொல்வீங்க போல.... எந்த அதிகாரி உங்கட்ட வந்து கெஞ்சுனாருன்னு சொல்ல முடியுமா? நீங்க நடத்துறதே விளம்பர முகாம்... இது தெரிஞ்சா அந்த அதிகாரியே உங்கள நைய புடச்சிடுவாரு தெரியும்லே...

    வயிற்றெரிச்சல் 1க்கு பதில்:
    கேட்கின்றவன் கேனையனா?இல்லை உன்னைப்போல் கேனைத்தனமாக அவதூறு பரப்புபவன் கேனையனா? என்பதை எங்களை மூன்று முறை தொலைபேசியிலும் இரண்டு முறை எங்களை நேரில் அழைத்தும் இரத்த தானம் செய்யும்படி கேட்டுக்கொண்ட குவைத் மத்திய இரத்த வங்கியின் மக்கள் தொடர்பு அதிகாரி சகோதரி ஃபாத்திமா அவர்கள் முடிவு செய்வார்கள் வா. அப்புறம் யாரை யார் நையப்புடைப்பாங்கன்னு தெரியும்ல.

    பதிலளிநீக்கு
  7. செய்தி
    ---- குவைத் மத்திய இரத்த வங்கியின் இரத்தம் எடுக்கும் பிரிவு பொறுப்பாளர் டாக்டர் நபீல் முகம்மது அப்துல் ரஹீம் நம்மிடம் கூறுகையில்,தனது வாழ்நாளில் இப்படி தன்னார்வத்தோடும், அமைதியாகவும், போட்டிப் போட்டுக் கொண்டு மறுமையை மட்டுமே இலக்காக கொண்டு,இரத்த தானம் செய்யும் ஒரு கூட்டத்தை இப்பொழுதுதான் பார்க்கிறேன் என்றார்.

    அதுமட்டுமல்லாது இரத்தத்தை வியர்வையாக சிந்தி பிழைப்பு நடத்தும் இந்த சகோதரர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு இரத்த தானம் செய்வது தனக்கு நெகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். ----

    வயிற்றெரிச்சல் 2:
    அப்ப நாங்க (tmca) கொடுத்தப்பவும் இதே மாதிரி சொன்னாரே.. யார் ரத்தம் குடுத்தாலும் அங்குள்ள அதிகாரிங்க அப்படித்தான் வாழ்த்து சொல்வாங்க... அதப்போய் தங்களுக்கு மட்டும் கெடச்ச அங்கீகாரம்னு எடுத்துகிட்டா உங்கள போல பைத்தியக்காரங்க யாரும் இருக்க முடியாது.
    வயிற்றெரிச்சல் 2க்கு பதில்:
    அந்த மருத்துவர் மனிதாபிமானம் உள்ளவர் நெகிழ்ந்து போனார்.

    இது போன்ற இஸ்லாம் காட்டித்தந்த மனிதாபிமான செயலை செய்ய துப்பில்லாதவன் பொறாமைக்காரன் நீ எரிச்சல் படுகிறாய்.

    நீ உண்மையான முஸ்லிமாக இருந்தால் உண்மையான பெயரில் எழுது TMCA வை சார்ந்தவனைப்போல் எழுதி அந்த அமைப்பை கலங்கப்படுத்தாதே.உன்னைப்போல் ஒரு முனாஃபிக்கை அந்த அமைப்பு உறுப்பினராகக் கூட வைத்திருக்காது என்று நம்புகிறோம்.இனிமேல் உன் வயிற்றெரிச்சலை கொட்டுவதாக இருந்தால் வேறு ஒரு அமைப்பின் பெயரை பயன் படுத்திக்கொள் ஏனென்றால் TMCA வின் நிர்வாகிகளோடு நாங்கள் அதிக தொடர்பு உடையவர்கள் உன் குட்டு வெளியாகி விடும்.

    இனி முகம்மது சமீர்,அக்பர் என்று உன் பெயரை மாற்றி மாற்றி எழுதுவதை நிறுத்திவிட்டு உண்மையான பெயரில் ஆரோக்கியமான விமர்ச்சனங்களை எழுது.

    ஏனென்றால் எங்களுக்கு கிடைத்த அங்கீகாரத்தை பொறுக்கமுடியாமல் உன் பெயரை மாற்றப்போய் உன் பிள்ளை ஏதாவது ஒரு சமீரையோ,அக்பரையோ daddy என்று அழைத்து உனது அங்கீகாரத்தை அவனுக்கு கொடுத்து கொடுத்து விடப்போகிறது. பின்னர் எங்களை பைத்தியக்காரன் என்று சொன்ன நீ பைத்தியக்காரனாகி விடுவாய்.

    பதிலளிநீக்கு
  8. செய்தி
    ---தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் இரத்த தானம் செய்துகொண்டிருந்த போது பாகிஸ்த்தானை சேர்ந்த அஷார் முகம்மது என்பவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் தனது சகோதரர் அக்தர் முகம்மதுக்கு அவசரமாக இரத்தம் தேவை ஏற்ப்பட்டதால் ஜமாஅத் நிர்வாகிகளை அணுகினார்,உடனே குவைத் மண்டல முன்னாள் செயலாளர் உசேன் பாபு அந்த சகோதரருக்கு இரத்தம் வழங்கினார்.---

    எரிச்சல் 3:
    குவைத்ல யாருக்காவது ரத்தம் தேவைப்பட்டா அவர் இரத்த வங்கியிலதான் அத வாங்கிக்கனும். நேரிடையா ரத்தம் குடுக்க முடியாது. எந்த குருப் ரத்தம் உள்ளவங்களும் குடுத்து உதவலாம். அத வாங்கிட்டு தேவையுள்ளவங்களுக்கு தேவைப்படற குருப்பை கொடுப்பாங்க.... இதுதான் உண்மை... இத உட்டுட்டு அவருக்கு ரத்தம் தேவப்பட்டிச்சாம் இவரு உடனே குடுத்தாராம்... தலைவன் PJ மாதிரியே கூட கூடயா பூ சுத்துறீங்களே... அல்லாஹ்வுக்கு பயந்து எதயும் சொல்லுங்கப்பு.. இந்த மாதிரி குவைத் நிலவரம் தெரியாமா எழுதி மாட்டிக்க போறீங்க...

    வயிற்றெரிச்சல் 3க்கு பதில்:
    குவைத்தில் யாருக்காவது ரத்தம் தேவைப்பட்டா blood bank குத்தான் போகணும் பின்ன cmmercial bank க்கு போகனும்னு எவன் சொன்னான்.

    ஒரு சகோதரர் ஒரு பாகிஸ்த்தாநியருக்கு இரத்தம் கொடுத்தார் அதை நாம் சாதாரணமாக செய்தி நடையில் எழுதினோம்,அது சாதாரண அறிவுள்ள எவருக்கும் எளிதாக புரியும், எதிலாவது, எப்படியாவது ஃபித்னா கலப்ப வேண்டும் என்று படித்தால் அப்படித்தான் விளங்கிக் கொள்ள முடியும்.

    உதாரணத்திற்கு ஒருவர் பணம் கொடுத்தார் என்றால்,பணம் கொடுத்தார் என்றுதான் சொல்ல முடியும் தேவை ஏற்ப்பட்டால்தான் செக்காக கொடுத்தாரா? டிராஃப்ட்டாக கொடுத்தாரா?இல்லை வங்கிக்கணக்கில் போட்டாரா என சொல்ல முடியும்.இது சாதாரணமாக புரிந்துக் கொள்ளமுடிகிற விசயம்தானே.

    இல்லை இன்னும் இது போன்ற கூமூட்டைகளுக்கு புரிவது போல் சொல்ல வேண்டும் என்றால் உதாரணத்திற்கு இந்த கருத்தை எழுதிய அக்பர் சுனாமி நிவாரனத்திர்க்காக வசூல் செய்து மோசடி செய்தார் என்று வைத்துக்கொள்வோம் அக்பர் சுனாமி மோசடி செய்தார் என்றுதானே சொல்ல முடியும் தேவை ஏற்ப்ப்படும்போது தானே,வசூல் செய்ததை கணக்கில் காட்டாமல் விட்டு விட்டாரா?இல்லை கணக்கு காட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்காமல் விட்டு விட்டாரா? என விரிவாக சொல்ல முடியும்.
    எவன் எதை சொன்னாலும் இவர்களுக்கு PJ வை கொஞ்சம் சொரிந்தாக வேண்டுமே. தலைவன் PJ வை போல் பூ சுத்துகிரோமாம்.
    பூ சுற்றுவோம் சகோதரா இப்போது இல்லை இப்படி -------த்தனமாக உன் உண்மை முகம் தெரியாமல் எழுதும் நீ ஒரு நாள் எங்களிடம் சிக்கும்போது உனக்கு புடவைக்கட்டி உன் தலையிலும் பூ சுற்றுவோம்.

    பதிலளிநீக்கு
  9. செய்தி
    ---மேலும் லஜ்னா தவாசிலை சேர்ந்த குவைத்திகளும்,எகிப்து நாட்டவர்களும்,மற்றும் இஸ்லாம் அல்லாத சகோதரர்களும் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தது குறிப்பிடத்தக்கது.--

    வயிற்றெரிச்சல் 4:
    டெய்லி அந்த இடத்துல நிறய பேரு ரத்தம் குடுக்காறுங்க.... நீங்க போன அன்னிக்கும் அவங்க வந்திருப்பாங்க... அத போய் ஏதோ TNTJ சேவய பார்த்துட்டு வந்துதான் குடுத்தாங்கன்னு மனப்பால் குடிக்காதீங்க... உங்க கொள்கைய அவங்ககிட்ட சொல்லுங்க... அப்புறம் என்ன நடக்குதுன்னு தெரியும்?

    ஒழுங்கா பொழக்க வந்தோமா? ஹலாலா சம்பாரிச்சு ஹலாலா செலவு பண்ணிநோமா என்றில்லாமல் இந்த கொள்கயில இருந்துட்டு உங்கள நீங்கள ஏமாதிகிட்டு மறுமை வாழ்வை பாழ் பண்ணிக்காதீங்க....

    வயிற்றெரிச்சல் 4 கிற்கு பதில்:
    லஜ்னா தவாசிலை சேர்ந்த குவைத்திகள் நமது ஜமாத்தின் சேவையை பார்த்து நாம் நடத்தும் அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.ரமலானில் நடந்த என்னை கவர்ந்த இஸ்லாம் நிகழ்ச்சி அவர்களும் நாமும் சேர்ந்து நடத்தியதுதான்.
    அது மட்டுமில்லாமல் வயிற்றெரிச்சல்காரர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதற்கு பெரிய ஆதாராம் நமது 2009 ரமலான் மலரின் புகைப்படத்தில் உள்ள குவைத்தியும் நமது இரத்த தான புகைப்படத்தில் உள்ள குவைத்திகளின் புகைப்படத்தையும் ஒப்பிட்டால் தெரிந்து விடும்.

    அதுவும் இல்லை என்றால் இந்த வயிற்றெரிச்சல்காரர்கள் நம்மோடு வந்தால் அந்த குவைத்திகளிடம் அலைத்துப்போகிறோம் அப்போது தெரியும் நாம் மனப்பால் குடிக்கிரோமா?இல்லை இவர்கள் குடித்த பாலை கக்குகிரார்களா என்று.

    நாங்க ஒழுங்கா பிழைக்க வம்ந்த இடத்தில் ஹலாலான் சம்பாரிச்சி ஹலாலா செலவு செய்து அத்தோடு எங்களால் முடிந்த அளவு இறைப்பணியும் செகிறோம்.

    நீங்கள் எப்போதும்போல் ஃபித்னா பேசிக்கிட்டே உங்க முனாஃபிக் வேலைய தொடருங்க.


    சகோதரர்களே வாதங்களுக்கே பதில் சொல்லி பழக்கப்பட்ட நாம் இது போன்ற வாந்திகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டதற்கு காரணம் இது போல் இனி தொடரக்கூடாது என்பதற்காகத்தான்.

    மேலும் நமது ஜமாஅத் நடத்தும் நிகழ்ச்சிகளை செய்தியாக வெளியிடுவது இந்த வயிற்றெரிச்சல் காரர்கள் சொல்வது போல் பேருக்காகவும் புகழுக்காகவும் அல்ல.மாறாக மக்களை நன்மையின் பக்கம் அளிப்பதற்காகவும்,நன்மையான செயலை செய்ய தூண்டுவதர்க்காகவும் தான் என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.

    இது போன்ற சேவைகளை செய்யும் எந்த ஒரு அமைப்போ இயக்கமோ இப்படி செய்தி வெளியிடுவது சாதாரண ஒன்றுதான்.ஆனால் அதையே நாம் செய்யும்போது தான் இவர்களால் பொறுக்க முடிய வில்லை.

    எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன்.

    பதிலளிநீக்கு
  10. \\யார் சொன்னது? குவைத்ல இருக்குற எல்லா தமிழக முஸ்லிம்களுக்கும் நம்ம TMCA சொந்தம் என்று தங்களுக்கு தெரியுமா? உறுப்பினராக ஆகித்தான் செய்ய வேண்டும் என்பதில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்\\

    சரி இருக்கட்டும் முஸ்லிம்களுக்குத்தானே சொந்தம் உன்னமாரி முனாஃபிக்குக்கு
    சம்பந்தமே இல்லன்னு அதன் நிர்வாகியே சொல்லிட்டாரே.


    \\ஏங்க.. TMCAவை பாராட்டித்தான் எழுதியுள்ளேன். அது தப்புங்களா? அப்ப TMCA, TNTJ எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா? இத்தன நாளு இது தெரியாம போச்சே?\\

    இதுக்கு பேருதான் பாராட்டி எழுதறதா? நீ சார்ந்திருக்கியே ஒரு கேவலமான இயக்கம் அது பெயரை use பண்ணி சொல்லுற அளவுக்கு ஒண்ணுமில்ல அதனால யார் குதிரைலயோ ஏறி சவாரி செய்றதோட குதிரையும் வம்புல இழுத்து விட பாக்குற.மொட்ட நோட்டீசு போட்டே பழக்கப்பட்டவன் தானப்பா நீ.


    \\சந்தடி சாக்குல ரசூலுல்லாஹ் மட்டும் தலைவர் இல்ல... எங்களுக்கு மாநில தலைவரும் உண்டு என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி! (இப்படி மாநிலம், மண்டலம் என்றெல்லாம் ரசூலுல்லாஹ் காலத்தில் இருந்தது பாருங்க...?)//

    அடப்பாவி அப்படினா நீ ரசூல்(ஸல்) தான் உங்க தலைவருமாரி பேருக்கும் புகழுக்கும் ஆசைப்படாதிங்கனு சொன்னியா?
    நாந்தான் தப்பா புரிஞ்சிகிட்டு அல்த்தாஃபி எல்லாம் இழுத்துட்டேனா?

    மறுபடியும் கேட்கிறேன் எங்கள் தலைவர் ரசூல்(ஸல்) எந்த பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டாங்கனு நிரூபிக்க முடியுமா?

    பதிலளிநீக்கு