


கடந்த வருடங்களில் நிர்வாகிகள் இரத்த வங்கியை அணுகி விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையில் முகாம் நடத்த அனுமதி கேட்டு மறுக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்குப் பிறகு அனுமதி பெற்று நடத்தினார்கள்.
ஆனால் இந்த வருடம் எல்லாம் வல்ல இறைவன் அந்த வரலாற்றை மாற்றி அமைத்துள்ளான்.ஆம் குவைத் இரத்த வங்கி அதிகாரிகளே நம் மண்டல நிர்வாகிகளை அணுகி இரத்த வங்கியில் இரத்த தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளதால் இரத்தம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையை நமக்கு ஒதுக்கித்தருவதாகவும் தாங்களே முன் வந்ததோடு ஒரு நிபந்தனையும் வைத்தனர்.
கடந்த முறை போல் ஒரே நேரத்தில் முன்னூறு நானூறு பேர் வந்தால் அவ்வளவு பேருக்கும் ஒரே நேரத்தில் இரத்தம் எடுக்கும் சவுகரியம் தங்களிடத்தில் இல்லாததால் நூறு பேர் மட்டும் வாருங்கள்,மறுபடியும் எத்தனை வெள்ளிக்கிழமை வேண்டுமானாலும் ஒதுக்கித்தருகிறோம் மற்றவர்களை அப்போது அழைத்து வாருங்கள் என்றனர்.
அதன்படி யாருக்கும் சிரமம் கொடுக்க விரும்பாத நமது ஜமாஅத் நிர்வாகிகள் சரி என்று ஒப்புக்கொண்டனர்.
எனவே நூறு பேர் மட்டும் 6-11-2009 வெள்ளிக்கிழமையும்,
மற்றவர்கள் 4-12-2009 வெள்ளிக்கிழமையும் இரத்தம் வழங்க ஏற்பாடு செய்வது என தீர்மானித்து மண்டல மருத்துவ அணியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு சிறப்பாக நடந்தேறியது.அல்லாஹு அக்பர்
குவைத் மத்திய இரத்த வங்கியின் இரத்தம் எடுக்கும் பிரிவு பொறுப்பாளர் டாக்டர் நபீல் முகம்மது அப்துல் ரஹீம் நம்மிடம் கூறுகையில்,தனது வாழ்நாளில் இப்படி தன்னார்வத்தோடும், அமைதியாகவும், போட்டிப் போட்டுக் கொண்டு மறுமையை மட்டுமே இலக்காக கொண்டு,இரத்த தானம் செய்யும் ஒரு கூட்டத்தை இப்பொழுதுதான் பார்க்கிறேன் என்றார்.
அதுமட்டுமல்லாது இரத்தத்தை வியர்வையாக சிந்தி பிழைப்பு நடத்தும் இந்த சகோதரர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு இரத்த தானம் செய்வது தனக்கு நெகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். அல்ஹம்துலில்லாஹ்!
தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் இரத்த தானம் செய்துகொண்டிருந்த போது பாகிஸ்த்தானை சேர்ந்த அஷார் முகம்மது என்பவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் தனது சகோதரர் அக்தர் முகம்மதுக்கு அவசரமாக இரத்தம் தேவை ஏற்ப்பட்டதால் ஜமாஅத் நிர்வாகிகளை அணுகினார்,உடனே குவைத் மண்டல முன்னாள் செயலாளர் உசேன் பாபு அந்த சகோதரருக்கு இரத்தம் வழங்கினார்.
இலங்கையை சேர்ந்த சகோதரர் c.m.p.முகம்மது என்ற சகோதரர் நம்மிடம் கூறுகையில் தானக்கு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தோடு சேர்ந்து இது போன்ற சேவைகளில் ஈடுபடுவது பெரும் மகிழ்ச்சியை கொடுப்பதாகவும்,தான் சகோதரர் பி.ஜெ.அவர்களின் ஓலி நாடாக்களை கேட்டுத்தான் தூய இஸ்லாத்தை தெரிந்துகொண்டதாகவும்,பதினைந்து வருடத்திற்கு முன்பு க்ளோரியா மார்த்தா என்ற பெங்களூரை சேர்ந்த ஒரு கிருத்துவ பெண்மணிதான் பி.ஜெ.அவர்களின் ஓலி நாடாவை கொடுத்து இவர் எவ்வளவு அழகாக இஸ்லாத்தை சொல்லியிருக்கிறார் கேட்டுப்பார் என்று கொடுத்ததாகவும் கூறினார்.
மேலும் லஜ்னா தவாசிலை சேர்ந்த குவைத்திகளும்,எகிப்து நாட்டவர்களும்,மற்றும் இஸ்லாம் அல்லாத சகோதரர்களும் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தது குறிப்பிடத்தக்கது.